மட்டக்களப்பு கரடியனாறில் வெடிப்பு சம்பவம் : 60 பேர் பலி – 50க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு – கரடியனாறு காவற்துறை நிலையத்தில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்ட பிரதி காவற்துறை மா அதிபரின் தகவல்படி காவற்துறை நிலையத்தின் கட்டிடத்தொகுதி சேதமடைந்துள்ளதாகவும் சில காவற்துறை அதிகாரிகளுக்கு காயமேற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

பிந்தி கிடைத்த தகவல் அடிப்படையில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற கரடியனாறு பிரதேசத்தில் இருந்து ஏழு பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மேலும் சிலர் சம்பவ இடத்தில் இருந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணைப்பு

இன்று கரடியனாறு காவற்துறை நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 60க்கு பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் 46க்கம் அதிகமானவர்கள் இதுவரையில மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்துள்ளவர்களுள் பொது மக்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

 
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.