பாக்.தீவிரவாதிகள் 200 பேர் வரை இலங்கையில்! இந்தியாவுக்கு அமெ. உளவு நிறுவனங்கள் எச்சரிக்கை

பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 200 பேர் வரை இலங்கையில் உள்ளார்கள் என்று அமெரிக்க புலனாய்வு நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இந்தியாவை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளுக்கு இலங்கையைப் பிரதான தளமாகப் பயன்படுத்துகின்றமையே இத்தீவிரவாதிகளின் திட்டம் என்று இப்புலனாய்வு நிறுவனங்கள் எச்சரித்தும் உள்ளன.

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் உள்ள புனே பிரதேசத்தில் ஜேர்மனிய பேக்கரி ஒன்றின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது.

இதில் ஒன்பது பேர் வரை உயிர் இழந்தமையுடன் 33 பேர் வரை காயம் அடைந்திருந்தார்கள். இக்குண்டுவெடிப்பு சம்பந்தமாக மராட்டிய மாநில பொலிஸார் தீவிரவாதிகள் இருவரைக் கைது செய்துள்ளனர்.

செய்யப்பட்ட இருவரில் ஒருவரான ஹிமாயத் பெய்க் என்பவர் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர். இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அளவில் சென்று குண்டுகளை தயாரிக்கின்றமை தொடர்பாக 15 நாட்கள் பயிற்சி பெற்றார் என்றும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துக்கு கொழும்பில் பயிற்சி முகாம் உண்டு என்றும் மராட்டிய பொலிஸாருக்கு பெய்க் கூறி இருக்கின்றார்கள்.

ஆனால் கொழும்பில் எந்தவொரு தீவிரவாத அமைப்பின் பயிற்சி முகாமும் கிடையாது என்று இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே மேற்கண்டவாறு அமெரிக்க புலனாய்வு நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவை இந்தியாவுக்கு இப்புலனாய்வுத் தகவலை வழங்கியும் உள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.