கூட்டமைப்பைச் சந்திக்க அரசாங்கம் திட்டம்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது அமெரிக்காவில் தங்கியிருக்கும் மகிந்த றாஜபக்ச நாடு திரும்பிய பின்னர் இந்தச் சந்திப்பிற்கான திகதி நிர்ணயிக்கப்பட இருக்கிறது.

வடக்கின் அபிவிருத்திப் பணிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புயும் இணைத்துக் கொள்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்தே பேச்சுக்கள் நடத்தப்பட இருப்பதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.