நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு பொன்சேகாவுக்கு தடை

சிறீலங்கா நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கு கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா (23) தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சபாநாயகர் சமால் ராஜபக்சாவிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. பொன்சேகாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை குறித்து ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறீ ஜெயசேகர தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

பொன்சேகா நாடாளுமன்றம் செல்ல அனுமதிக்கப்படாதது சட்டவிரோதமானது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.