எழிலனின் துணைவியாரின் கூற்றுக்கு இராணுவம் மறுப்பு; மறைமுக எச்சரிக்கை

பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த இராணுவத்தினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலேயே எழிலனின் மனைவி ஆனந்தி சஷிதரனின் கருத்து அமைந்துள்ளது என இராணுவப் பேச் சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்ததன் மூலம் எழிலனின் துணைவியாருக்கு இராணுவத்தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.இனிவரும் காலத்தில் சாட்சியம் அளிப்போர் தயக்கத்துடன், உண்மைகளை கூறாது இருப்பதற்கு இராணுவத்தின் இந்த மறைமுக எச்சரிக்கை காரணமாக அமையும் என கூறப்படுகின்றது.

எழிலன் உள்ளிட்ட ஏழு சிரேஷ்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் படையினரிடம் சரணடைந்தனர். இவர்களை இராணுவத்தினர் மறைமுகமான இடத்தில் தடுத்து வைத்துள்ளனர் என்று மஹிந்தவின் ஆணைக்குழுவின் முன்னிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக செயற்பட்ட எழிலனின் மனைவி ஆனந்தி சஷிகரன் அண்மையில் சாட்சியமளித்தார்.

இவரின் இக்கருத்து உண்மையா? என்றும் இவர்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா என்றும் இராணுவப் பேச்சாளர் உபய மெதவலவிடம் “உதயன்’ பத்திரிகை கேள்வி எழுப்பியது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றனர். கொடூர தீவிரவாதத்தை இல்லாதொழித்த இராணுவத்தினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கிலேயே இக்கருத்து அமைந்துள்ளது. சரணடைந்தவர்களை அரசு நன்றாகக் கவனிக்கின்றது. அண்மையில் இப்படியானவர்களில் 500 பேருக்கு அரசு திருமணம் செய்து வைத்தது. இப்படி இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஆனால் எழிலன் மற்றும் எழுமரும் சரணடைந்தார்களா? உயிரோடு இருக்கின்றார்களா என்பதற்கு இராணுவ பேச்சாளர் பதிலளிக்காமை அவர்கள் உயிரோடு இல்லை என்பதனையே காட்டுவதுடன் அவர்கள் உயிருடன் சரணடையவில்லை என் இராணுவம் கருதுவதாகவே இருக்கின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.