சுவிஸில் இலங்கைத் தமிழ் இளைஞன் மாயம்!

இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் ( வயது 21) சுவிற்சலாந்தில் கடத்தப்பட்டுள்ளார்.Bern மாநகரத்தில் உள்ள Verchingen பிரதேசத்தில் hamlet Lindental பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நண்பர்களுடன் வசித்து வந்த இவர் நேற்று அதிகாலை 7.00 மணியளவில் காணாமல் போய் இருக்கின்றார்.

இலங்கையர் இருவர் பழைய சில்வர் கார் ஒன்றில் அவரை ஏற்றிச் சென்றிருக்கின்றார்கள் என்று Bern மாநகரப் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கடத்தல்காரர்களில் ஒருவர் 185 சென்ரி மீற்றர்கள் உயரம் உடையவர் என்றும் 38 வயது க்காரர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மற்றவர் 180 சென்ரி மீற்றர்கள் உயரம் உடையவர் என்றும் 35 வயதுக்காரர் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.