புலிகளின் குரல் அலுவலகம் படைமுகமாக மாறுகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் நிறுவனம் இயங்கிய கிளிநொச்சிப்பகுதியில் தற்போது அந்த நிறுவன கட்டடங்களை முழுமையாக அடித்து நொறுக்கி விட்டு அவ்விடத்தில் புதிய படைமுகாம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே இவ்அலுவலகம் இலங்கை விமானப்படையின் குண்டுத்தாக்குதலில் பலத்த சேதத்திற்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. விடுதலைப்புலிகளின் வரலாற்று நினைவிடங்கள் மற்றும் அவர்களின் பிரதான அமைவிடங்கள் என்பனவற்றை படையினர் தமது படை முகாமாக மாற்றி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.