கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த வயோதிபப் பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

இரண்டு கிழமைகளுக்கு முன்னர் கனடாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த வயோதிபப் பெண்ணொருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – துன்னாலை கோவிந்த கடவை பகுதியைச் சேர்ந்த திருமதி வல்லிபுரம் மகேஸ்வரி என்ற 76 வயதுடைய வயோதிப பெண்ணொருவரே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவா சடலத்தை பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.இச்சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.