பொன்சேகா சிறைத் தண்டனை : மஹிந்த மீது படையினர் அதிருப்தி.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு விதிக்கப்பட்ட தண்டனை இராணுவத்தை அவமரியாதைக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துள்ளதென படைவீரர்கள் தெரிவித்துள்ளனர்.


தற்கொலைத் தாக்குதலின் போது உயிராபத்தை எதிர்நோக்கிய பொன்சேகா நினைத்திருந்தால் இராணுவத் தளபதியாகவே ஓய்வு பெற்றிருக்க முடியும் எனவும், பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் நோக்கில் தொடர்ந்தும் அவர் பதவியில் நீடித்ததாகவும் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவான படைவீரர் அமைப்பொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

சரத் பொன்சேகா வரப்பிரசாதங்களை இலக்கு வைத்து செயற்படவில்லை என ஓய்வு பெற்ற இராணுவக் கப்டன் கயான் வித்தானகே தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா அரச நிதியை கையாடியதாக சில அரசாங்க ஊடகங்களில் போலியான தகவல்களை வெளியிட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சரத் பொன்சேகாவிற்கு தண்டனை விதித்ததன் மூலம் ஜனாதிபதி நாட்டுப் படைவீரர்களை அவமரியாதைக்கு உட்படுத்தியுள்ளதாகவும், இதற்காக ஜனாதிபதி மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.