10,000 ஏக்கரில் இராணுவக் குடியிருப்புகள், முகாம்கள் முல்லைத்தீவு நிலைமை

முல்லைத்தீவு மாவட்டத் தில் புதுக்குடியிருப்பிலிருந்து வற்றாப்பளை வரையான பிரதே சத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் இராணுவ குடியிருப்புகளையும், பாரிய இராணுவ முகாம் மற்றும் விமான நிலையம் ஆகியவற்றை யும் அமைக்கும் வேலையில் அரசு ஈடுபட்டிருக்கிறது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந் திரன் குற்றம் சாட்டினார்.

வன்னியிலிருந்து இடம் பெயர்ந்தவர்களில் இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதிலும் ஒருவருக்குக்கூட நிரந்தர வீடு கட்டிக்கொடுக்கப் படவில்லை என்றும், தகரங்களி னால் அமைக்கப்பட்ட தற்காலிக குடிசைகளிலேயே அவர்கள் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டி ருக்கிறார்கள் என்றும் அவர் குறிப் பிட்டார்.

ஜெனிவாவில் நடைபெறும் சர்வதேச நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற் காக சென்றிருந்த சுரேஷ் பிரே மச்சந்திரன் நேற்றுமுன்தினம் இரவு லுசேர்ன் மாநிலத்தில் உள்ள தமிழ் மக்களை சந்தித்து தமிழ் மக்களின் சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் போரி னால் பாதிக்கப்பட்ட மக்களின் அவ லங்கள் குறித்து விளக்கினார்.

அவர் அங்கு உரையாற்றுகையில் மேலும் கூறியவை வருமாறு: வன்னியில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களும், குடும்ப அங்கத்தவர்களை இழந்தவையாக அங்கவீனமடைந்தவையாக அல்லது தாய் தந்தையை இழந்தவையாகக் காணப்படுகின்றன. அவர்களுக்கு அரசிடமிருந்தோ அல்லது அரசசார்பற்ற நிறுவனங்களிடமிருந்தோ உதவிகள் கிடைக்கவில்லை.

வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்படும் அதேவேளை, அங்குள்ள இராணுவத்தினருக்கு குடியிருப்புகளை அமைத்து அவர்களின் குடும்பங்களை அங்கு குடியேற்றுவதிலும் அரசு அக்கறை காட்டி வருகிறது.

புதுக்குடியிருப்பிலிருந்து வற்றாப்பளை வரையான பிரதேசத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் இராணுவ குடியிருப்புகளையும் பாரிய இராணுவ முகாம் மற்றும் விமான நிலையம் ஆகியவற்றையும் அமைக்கும் வேலையில் அரசு மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது.

இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்காலில் பாரிய கடற்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அரசு திட்டமிட்டவாறு, இராணுவ குடியிருப்புகள் அமைக்கப்படுமாக இருந்தால் 4 இலட்சம் சிங்களவர்கள் வடக்கில் குடியமர்த்தப்படலாம். இது எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விகிதாசாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இது தொடர்பாக இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு நாம் கொண்டு வந்துள்ளோம். இத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் தாங்கள் வாழும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படி சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.