இலங்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் புலனாய்வு! ஐ.நாவின் முன்னாள் உதவிச் செயலர் வலியுறுத்து

இலங்கையில் கடந்த வருடம் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றன என்று கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச மட்டத்தில் சுதந்திரமான புலனாய்வு விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றார் ஐ.நா சபையின் உதவிச் செயலாளர் நாயகமாக இருந்த Denis Halliday.

இவர் அயர்லாந்தின் தலைநகர் டுப்ளினில் இடம்பெற்ற கூட்டங்கள் இரண்டில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:-”இலங்கை மறக்கப்பட்டு விட்டது. இலங்கையால் இழைக்கப்பட்ட மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச் செயல்கள், மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் மறக்கப்பட்டு விட்டன. அவை கருத்தில் கொள்ளப்படாமல் உள்ளன.”இவர் இக்கூட்டத்தில் இலங்கையால் மேற்கொள்ளப்பட்டன என்று கூறப்படும் யுத்தக் குற்றங்களுக்கான ஆதாரங்களையும் முன்வைத்து இருந்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.