ஆஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்கள் மூவர் விமான நிலையத்தில் மாயம்!

ஆஸ்திரேலியாவில் இருந்து நேற்று முன் தினம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்கள் மூவர் காணாமல் போய் இருக்கின்றார்கள் என்று ஆஸியில் இருந்து வெளியாகும் பத்திரிகைகள் செய்தி பிரசுரித்துள்ளன.

இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து படையினரால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.அரசியல் தஞ்சம் கோரி சுமார் ஒரு வருடத்துக்கு முன் ஆஸ்திரேலியாவை படகு மூலம் புறப்பட்டிருந்த இலங்கைத் தமிழர்கள் 254 பேரில் இவர்களும் அடங்குவர்.காணாமல் போயிருக்கும் மூவரதும் பாதுகாப்புக் குறித்து பெற்றோரும், குடும்பத்தினரும் பெரிதும் கவலைப்படுகின்றார்கள் என்றும் இப்பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.இந்நிலையில் ஆஸ்திரேலியா புகலிடம் கோரி வந்த தமிழர்களை திருப்பி அனுப்பக் கூடாது என்று அகதிகள் நலன் பேணும் அமைப்புக்கள் மீண்டும் வலியுறுத்தி உள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.