நேட்டோவுக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற 27 வாகனங்கள் மீது தாக்குதல்

நேட்டோ படைகளுக்கு எரிபொருள் ஏற்றிச்சென்ற மேலும் 27 எண்ணெய்த் தாங்கி வாகனங்கள் பாகிஸ்தானில் வைத்து ஆயுததாரிகளால் அழிக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை மாலை ஆயுததாரிகள், இவ்வாகனங்கள் மீது துப்பாகிச்சூடு நடத்தியதால் அவை தீப்பற்றி எரியத் தொடங்கியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அக்டோபர் மாத ஆரம்பத்திலிருந்து நேட்டோ படைகளின் விநியோக வாகனங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட 5 ஆவது தாக்குதல் சம்பவம் இதுவாகும்.

இச்சம்பவத்திற்கு பிறகு தாக்குதலை மேற்கொண்ட ஆயுததாரிகளைத்தேடி பாரிய தேடுதல் நடவடிக்கையொன்று இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. _

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.