இளந்திரையனை மீட்டுத்தாருங்கள் மனைவி நல்லிணக்க ஆணைக்குழு முன் நேற்று மன்றாட்டம்

கையில் காயப்பட்டிருந்த எனது கணவரை மருந்து கட்டுவதாகக் கூறி இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அவர் எங்கு இருக் கிறார் என்பது தெரியவில்லை. அவரைக் கண்டுபிடித்து என்னி டம் ஒப்படையுங்கள். இவ்வாறு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் நேற்று சாட் சியமளித்த விடுதலைப் புலிகளின் முன்னாள் இராணுவப் பேச் சாளர் இராசையா சிவரூபனின் (இளந் திரையனின்) மனைவி வனிதா சிவரூபன் மன்றாட்டமாகக் கேட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று ஆணைக் குழுவின் அமர்வு இடம்பெற்றது. அங்கு சாட்சியமளித்த வனிதா சிவரூபன் மேலும் தெரிவித்தவை வருமாறு:

நானும் கணவரும் பிள்ளைகளும் இராணுவக் கட்டுப்பாட் டுப் பகுதிக்கு வந்துகொண்டிருந்தோம். எனது கணவர் கையில் காயமடைந்திருந்தார். அதனை அவதானித்த இராணுவத்தினர் எனது கணவரை மருந்து கட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காகக் கூறி கூட்டிச் சென்றனர்.

எனது கணவர் விடுதலைப் புலிகள் இயக்க சிரேஷ்ட உறுப் பினர் என்பதனால் அவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று படையினர் உறுதியளித்தனர்.

பின்னர் நாங்கள் முகாமுக்குச் சென்றோம். முகாமுக்கு வந்த இருவர் தம்மை சி.ஐ.டி. என அறி முகப்படுத்தி எனது கணவர் ஆஸ் பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தாகவும் என்னை அங்கு வருமாறும் அழைத்தனர். அவர்களில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் நான் அவர்களுடன் செல்ல மறுத்து விட்டேன்.

சிரேஷ்ட உறுப்பினர்களின் உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என்று அரசு ஏற்கனவே உத்தரவாதம் அளித்திருந்தது. எனவே எனது கணவர் உயிருடன்தான் இருக்கிறார். அவரை என்னிடமே ஒப்படை யுங்கள் என்று கண்ணீர் உதிர்த்தவாறு சாட்சியமளித்தார் இளந்திரையனின் மனைவி.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.