கிழக்கு திமோரில் அடுத்த வருடம் அகதிகள் இடைத்தங்கல் முகாம்!

இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரி வருபவர்களின் புகலிடக் கோரிக்கைகளைப் பரிசீலிக்கவென கிழக்கு திமோரில் அகதிகள் இடைத் தங்கல் முகாம் ஒன்றை அமைப்பதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் Chris Bowen இற்கும் கிழக்குத் திமோர் ஜனாதிபதி Jose Ramos-Horta இடையில் பேச்சுக்கள் நேற்று இடம்பெற்று ஆசிய வலயத்துக்கான அகதிகள் இடைத் தங்கல் முகாம் ஒன்றை அடுத்த வருடம் அமைக்கின்றமைக்கு கொள்கையளவில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளார்கள்.அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளின் ஆலோசனைகளைப் பெறுகின்றமைக்கும் தீர்மானித்துள்ளார்கள்.இந்நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக ஆஸ்திரேலிய-கிழக்கு திமோத் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உதவியும் பெறப்பட உள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.