போரூட் அரச சார்பற்ற நிறுவனத்தின் பணிப்பாளர் நாடு கடத்தப்படவுள்ளார்

போரூட் என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் பணிப்பாளர் நாடு கடத்தப்பட உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்டதாக போரூட் அமைப்பின் பணிப்பாளர் ஆனே பேனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.

போரூட் அமைப்பின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் தீவிர கவனம் செலுத்தி வந்தததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் போரூட் காரியாலயத்தில் ஏற்றப்பட்டிருந்த இலங்கைத் தேசியக் கொடியை இறக்கிய குற்றத்திற்காக மற்றுமொரு வெளிநாட்டு உயரதிகாரி நாடு கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜனாதிபதியின் செயலகத்தினால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமையவே செயற்பட வேண்டுமென அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கப் பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.