அரச பேருந்து மோதியதில் ஊடகச் செயற்பாட்டாளர் பலி!

யாழ்ப்பாணம் மாம்பழம் சந்திப் பகுதியில் நேற்று காலை 7.30 மணியளவில் அரச பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஊடகச் செயற்பாட்டாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியுள்ளன.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பாலசந்திரன் ஜெயபாலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில் விநியோகஸ்தராகப் பணியாற்றும் ஜெயபாலன் பத்திரிகைகளை கிளிநொச்சியில் கொண்டு சென்று விநியோகித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த போது எதிரே மிக வேமாகச் சென்ற அரச பேருந்து மோதியதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.

அதன் பின்னர் அவர் யாழ்.போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.