கூட்டமைப்பின் தலைமை அலுவலகம் இன்று கொழும்பில் திறப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையக அலுவலகக் கட்டடம் இன்று காலை பம்பலப்பிட்டியில் திறந்துவைக்கப்பட விருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயங்கத் தொடங்கி பல வருடங் களான போதும் நிரந்தரக் கட்டடம் இல்லாத நிலையில் இதுவரை காலமும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களிலேயே கூட்டங்களை, சந்திப்புக்களை நடத்திவந்தது.

பம்பலப்பிட்டியில் உள்ள தனியார் கட்டடம் ஒன்றில் இன்று முதல் கூட்டமைப்பின் அலுவலகம் இயங்கவுள்ளது.

சம்பிரதாயபூர்வமாக அலுவலகம் திறக்கப்பட்ட பின்னர், தமிழரசுக் கட்சியின் செயற்குழு அங்கு கூடவிருக்கிறது. இன்றுள்ள அரசியல் நிலைமை தொடர்பாக இக்கூட்டத்தில் ஆராயப்படவிருக்கிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவும் நாளை புதிய அலுவலகத்தில் கூடி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயவிருக்கிறது என கூட்டமைப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.