தமிழர் தாயகத்தில் மொழிக்கலப்பை ஏற்படுத்த இந்தியா திட்டம்

மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த இந்திய அதிகாரிகள் இலங்கை செல்லவுள்ளனர்.  மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியாவிடம் சிறிலங்கா அரசாங்கம் உதவி கோரியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபலுடன் நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பேச்சு நடத்தியுள்ளார்.

சிங்களவாகள் செறிந்து வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழியினையும், தமிழர்கள் வாழும் பிரதேசங்ளில் சிங்கள மொழியினையும் கற்பித்து நாட்டின் இனப்பிரச்சினையிலிருந்து விடுபட இலங்கை, இந்தியாவிடம் மூன்று மொழி கற்கை நெறிகள் கற்பிப்பது தொடர்பில் உதவி கோரியுள்ளதாக – சிறிலங்கா செல்லவுள்ள குழுவில் இடம்பெறவுள்ள இந்திய மொழிகள் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ராஜேஸ் சச்தேவா கூறினார்.

மொழியில் வேறுபாட்டினையும் மற்றும் இந்தியாவின் மூன்று மொழிக் கற்கை நெறி தொடர்பில் விளக்கமளிப்பதற்காக, இந்திய மனித வள அபிவிருத்தி அமைச்சிலிருந்து பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.