ஓசியன் லேடி கப்பல் எங்கிருந்து வந்தது? ஊர்ஜிதப்படுத்த முடியாமல் கனடா அவதி!

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி 76 இலங்கைத் தமிழர்களுடன் கனடாவை வந்தடைந்த ஓசியன் லேடி கப்பல் எங்கிருந்து வந்தது? எங்கெல்லாம் தரித்து நின்றிருக்கின்றது? போன்ற விபரங்களை ஊர்ஜிதப்படுத்த முடியாமல் கனேடிய புலனாய்வு அதிகாரிகள் தடுமாறுகின்றனர்.

ஏனெனில் பயணப் பாதையை அறிந்து கொள்ளக் கூடிய உபகரணம் அக்கப்பலில் இல்லை. காணாமல் போய் இருக்கின்றது அல்லது அகற்றப்பட்டிருக்கின்றது.

இக்கருவியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் கரையோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டும் உள்ளனர். ஆனால் எம்.வி.சன்.சி கப்பலில் இக்கருவி இருக்கின்றது. அதை வைத்து எம்.வி.சன்.சியின் பூர்வீகத்தையே அறிந்து கொண்டனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.