நெடியவனை நாடுகடத்த வேண்டுமாம் – பேரினவாதி றொகான் குரணத்தினாவின் புலம்பல்

விடுதலைப்புலிகளின் பெருமளவான தலைவர்கள் வெளிநாடுகளில் இருப்பதாகவும், குறிப்பாக நெடியவன் அனைத்தலகத்தின் நடவடிக்கைகளுக்கு பெறுப்பாக இருப்பதால் அவரை நாடுகடத்த வேண்டும் என சிறீலங்கா அரச பயங்கரவாதத்திற்கும், மனித உரிமை மீறல்களுக்கும், போர்க்குற்றங்களுக்கும் துணைபோகும் சிங்கள பேரினவாதி றொகான் குணரத்தினா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பில் இருந்து வெளிவரும் பேரினவாத சிந்தனை கொண்ட லக்பிம வாரஏடு மேலும் தெரிவித்துள்ளதாவது:

விடுதலைப்புலிகள் அமைப்பு கனடா, நோர்வே ஆகிய நாடுகளில் ஒன்று சேர்ந்து வருகின்றது. அவர்களை கைது செய்யும் வல்லமை சிறீலங்கா அரசிடம் கிடையாது.

எனவே நோர்வே அரசுடன் பேச்சுக்களை மேற்கொண்டு அவர்களை நாடுகடத்த சிறீலங்கா அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நெடியவன் விடுதலைப்புலிகள் அமைப்பின் பயிற்சி பெற்ற போராளி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சிறீலங்கா அரசின் அரச பயங்கரவாதம், மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு ஊக்கமளித்துவரும் பேரினவாதி றொகான் குணரத்தினாவினால் அப்பாவி தமிழ் மக்கள் பெருமளவில் கடுமையான துன்பங்களை அனுபவித்து வருவதாக புலம்பெயர் தமிழ் சமூகப் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கனடாவை சென்றடைந்த கப்பலில் உள்ள 492 பேரும் பயங்கரவாதிகள் என றொகான் தெரிவித்திருந்தார். ஆனால் அதில் சென்ற அப்பாவி தமிழ் மக்களில் 42 குழந்தைகளும் அடங்கியிருந்தனர்.

எனவே சிறீலங்கா அரச பயங்கரவாத்திற்கு துணைபோனவாறு அப்பாவி தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிவரும் குணரத்தினா மீது அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது தொடர்பிலும், சிறீலங்காவின் போர்க்குற்றங்களில் அவருக்கு இருக்கும் பங்கு குறித்து ஆராய்வதிலும் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.