பொன்சேகா மீது இழைக்கப்படும் மனித உரிமை மீறல், தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும்: சர்வதேச மனித உரிமைகள் குழு

சர்வதேச நாடாளுமன்றங்களுக்கு இடையிலான மனித உரிமைகள் குழு, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு இழைக்கப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராயவுள்ளது.

குறித்த மனித உரிமைகள் குழுவின் செயலாளர் இக்னேபேக் செச்வாஸ் இதனை தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அண்மையில் இடம்பெற்ற இந்த நாடாளுமன்ற குழு மனித உரிமை குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தன முறைப்பாட்டை செய்திருந்தார்.

எனினும் இந்த முறைப்பாடு மனித உரிமைகள் குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கே, குழுவின் செயலாளர், அமைச்சரின் கருத்துக்கு எதிரான தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் சரத் பொன்சேகாவின் விடயம் தொடர்பில் தமது குழு, இரகசியமான முறையில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறிய தகவல் பொய்யானது என நிரூபிக்கப்பட்ட நிலையில், அவரை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.