ஈழத்தமிழர் விடயத்தில் இந்திய அரசு துரோகம் இழைக்கிறது – வைகோ

ஈழத்தமிழர் விடயத்தில் இந்திய அரசு துரோகம் இழைத்து வருகின்றது. 71 நாடுகள் பங்கேற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அழைத்து கௌரவம் அளித்தமையானது மன்னிக்க முடியாத செயலாகும் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதனால் இந்திய அரசாங்கத்தை தமிழக மக்களும் ஈழத்தமிழர்களும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழத்தமிழர்கள் போரினால் பட்ட துயரங்களை சித்தரிக்கும் போர் முகங்கள் எனும் ஓவியர் புகழேந்தியின் ஓவியக் கண்காட்சி மதுரையில் நடைபெற்று வருகின்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே வைகோ மேற்கண்டவாறு கூறியுள்ளார் என்று தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.