சூரியனின் ஒளி பூமியை குளிர்விக்கிறது – ஆய்வில் தகவல்

காலநிலை மாற்றத்தின் பின்னணியில் புவி வெப்பமடைந்து வந்தாலும் அதிகரித்து வரும் சூரியனின் வெப்ப ஒளிக்கற்றைகள், செயல்பாடுகளால் உண்மையில் பூமி குளிர்ச்சி அடைய செய்வதாக புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

வளர்ந்து வரும் நாடுகளில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவினால் நாளுக்கு நாள் புவி வெப்பம் அடைந்து வருகிறது. சூரியனுக்கும், பருநிலை மாற்றத்திற்கு உள்ள தொடர்பு குறித்து கடந்த 2004-முதல் 2007 ஆண்டு வரை ஆராய்ச்சி மேற்கொண்டதில், புவி வெப்பமடைதலுக்கு அதிகரித்து வரும் மனிதனின் செயல்பாடுகள் காரணம் என தெரியவந்துள்ளது.

கடந்த 11 ஆண்டுகளில் சூரியனின் வெப்ப ஒளிக்கற்றைகளின் சுழற்சியினால் பனிமலைகள் உருகி வருகின்றன. நதிகள் வறண்டுபோயும் உள்ளதாக இயற்கை மாற்றம் குறித்த ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த ஜோன்னா ஹெயாக் இம்பீரியல் கல்லூரி வெளியிட்டு ஆய்வறிக்கையில்,  அதிகரித்து வரும் சூரிய வெப்ப ஒளிக்கற்றைகள் உண்மையில் பூமியை குளிர்ச்சியாக்குகிறது என்பது கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. எனினும் இந்த ஆராய்ச்சி முடிவினை தெளிவாக உறுதிப்படுத்த முடியாது.  மேலும், தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாகவும் இதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படும் எனவும் டெலிகிராப் பத்திரிகையில் செய்திவெளியிடப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.