சரத் பொன்சேகா கைதிற்கு எதிரான சுவரொட்டிப் போராட்டம் தொடரும் ‐ சோமவன்ச அமரசிங்க

ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கு எதிரான சுவரொட்டிப் போராட்டம் தொடரும் என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
 
சுவரொட்டிகளை ஒட்டுவது தொடர்பிலான அரசாங்கத்தின் தடை உத்தரவுகளை மீறி சுவரொட்டிப் போராட்டம் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதன் மூலம் நாட்டின் ஜனநாயகம் ஒடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எதிர்க்கட்சிகள் மீது அரசாங்கம் பிரயோகித்து வரும் அடக்கு முறைகளுக்கு எதிராக போரட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.