மாவீரர் தினத்துக்கு அழைப்பு விடுத்த கணவன் மனைவி கிளிநொச்சியில் கைது

எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் தினத்தை அனுட்டிக்க வேண்டும் என்று கோரி கையடக்கத் தொலைபேசிகள் மூலம் குறும் தகவல்களை ஆட்களுக்கு அனுப்பி வந்த கணவன், மனைவி ஆகியோரைக் கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடுக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சில காலத்துக்கு முன்பு அங்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.