சிறுவர்களை பௌத்த பிக்குகளாக்க சிறுவர் அமைப்புக்கள் எதிர்ப்பு

சிறுவர்களை பௌத்த பிக்குகளான உருவாக்குவதற்கான பயிற்சிகளுக்கு சில சிறுவர் அமைப்புக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

எதிர்வரும் மே மாதம் அனுஸ்டிக்கப்படவுள்ள 2600ஆம் பௌத்த ஜயந்தி விழாவை முன்னிட்டு 2600 சிறுவர்கள் பௌத்த பிக்குகளாக பயிற்சி பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

சிறுவர்களின் வறுமையை ஒழிப்பதற்கும், பௌத்த மதத்தை வியாபிப்பதற்கும் இந்த விசேட நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ன குறிப்பிட்டுள்ளார்.

மிகச் சிறு வயதிலேயே துறவற வாழ்க்கையில் சிறுவர்களை ஈடுபடுத்துவது பொருத்தமாகாதென மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

செல்வந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் துறவற வாழ்க்கையில் ஈடுபடுத்தப்படுவதில்லை எனவும், வறிய பெற்றோரின் பிள்ளைகளே இவ்வாறு துறவற வாழ்க்கைக்குள் பிரவேசிப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

பராமரிப்பில் இருந்த சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த பல பௌத்த பிக்குகளை அண்மைக்காலமாக தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.