பெண்ணை வைத்து மன்மோகன் சிங்கை கவிழ்த்த மகிந்தா – பொதுநலவாய விளையாட்டுக்கள் அம்பலம்

பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது பழைய கதை, ஆனால் பெண் என்ற சொல்லை கேட்டாலே இந்திய தலைவர்கள் குத்தாட்டம் போடுவது புதிய கதை. இந்த புதிய கதையை அரங்கேற்றியிருக்கின்றது சிறீலங்கா அரசு.

இது தொடர்பில கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளதாவது:

வெளிநாடுகளின் தலைவர்களை தமக்கு சாதகமாக கொண்டுவருவதற்கு “தனிப்பட்ட உறவு” என்ற உறவுமுறைகளை வளர்ப்பது பல நாடுகளின் மரபாக இருந்து வருகின்றது. அதனை மேற்கொள்வதற்கான நிறுவனங்களும் உள்ளன.

அந்த வழியை பின்பற்றி இந்திய அரச தலைவர்களை கவிழ்த்துள்ளது சிறீலங்கா அரசு. இந்திய தலைவர்களுடன் தனிப்பட்ட உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கு இந்திய மங்கை ஒருவரின் நிறுவனத்திற்கு மாதம் 20,000 அமெரிக்க டொலர்களை வழங்கி வருகின்றது சிறீலங்கா அரசு.

மிகவும் சக்திவாய்ந்த பெண் என கருதப்படும் அந்த பெண், இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரை தனது வலைக்குள் வைத்துள்ளாராம். அந்த பெண்ணை அணுகினால் நடக்காத காரியம் என்பது இந்திய அரசியல் மட்டத்தில் இல்லையாம் என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பையும் வழிக்கு கொண்டுவருவதில் அவர் கில்லாடியாம். அண்மையில் முடிவடைந்த பொதுநலவாய அமைப்பு நாடுகளின் விளையாட்டுபோட்டியின் நிறைவுவிழாவில் கூட மகிந்தாவை முக்கிய விருந்தினராக இந்திய அரசு அழைப்பதற்கு அந்த பெண் தான் காரணமாம்.

அங்கு மகிந்தாவுக்கு செங்கம்பள வரவேற்று அளிக்கப்பட்டதுடன், மன்மோகன் விருந்தும் பரிமாறியுள்ளார். விழாவில் மகிந்தா மன்மோகனுக்கு பக்கத்தில் அமரவும் வைக்கப்பட்டார்.

பிரித்தானியா இளவரசர் எட்வேட்டுக்கு சரி சமனாக மகிந்தா உக்கார்ந்த மர்மமும் அதுதானாம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.