பொன்சேகாவுக்கு சிறைக்குள் ஆபத்துக்கள் நேரலாம் – அனோமா

ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு சிறைக்குள் வைத்து திட்டமிட்ட ரீதியிலான ஆபத்துக்கள் நேரலாம் என்று திருமதி அனோமா பொன்சேகா அச்சம் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்படும் பாதாள உலகக்கும்பல்களைச் சேர்ந்தவர்களை சட்டத்திற்குப் புறம்பான வகையில் பொலிஸார் மூலம் படுகொலை செய்வித்துவிட்டு, பொலிஸ் காவலிலிருந்த போது தப்பியோட முற்பட்ட வேளையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக அரசாங்கம் சமாளித்து விடுவதை திருமதி அனோமா பொன்சேகா உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அது போல சிறைக்குள் வைத்து கலகம் விளைவிக்க முயன்றார், அல்லது துப்பாக்கியொன்றைப் பறித்தெடுக்க முயன்றார் என்பன போன்ற போலியான குற்றச்சாட்டொன்றை முன்வைத்து சரத் பொன்சேகாவின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கையொன்றில் அரசாங்கம் இறங்கக் கூடுமென்றும் முயற்சிகளை மேற்கொள்ளக் கூடும் என்றும் அனோமா பொன்சேகா அச்சம் வெளியிட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.