கடும் குளிரின் மத்தியிலும் பேர்லீன் நோக்கி தொடரும் மாந்தநேய மிதிவண்டிப்பயணம்

சிறிலங்காஅரசு மேற்கொள்ளும் தமிழின அழிப்பிற்கெதிராக அனைத்துலக நாடுகளை உரிய நடவடிக்கை    எடுக்கக்கோரியும், தமிழரின் தன்னாட்சியுரிமையினை ஏற்றுக்கொள்ள வேண்டியும் தொடர்ந்த,

தொடருகின்ற பயணங்களில் ஒன்றான  மிதிவண்டிப்பயணம் இன்று (16.10.2010) ஆறாவது நாளை எட்டியுள்ளது.Münster நகரிற்கு அண்மையிலிருந்து  தொடங்கிய இவர்களது பயணம் காற்றுடனும், மழையுடனும், மலையுடனும் போராடி 85 கிலோமீற்றர்களைக் கடந்து Osnabrück நகரத்தை வந்தடைந்ததோடு தற்போது இவர்களின் மிதிவண்டிப் பயணம் Hannover நகரை நோக்கி சென்றவண்ணமுள்ளது.

பேர்லின் நோக்கிய 1000 km பயணத் தூரத்தில் தற்போது 551 km தூரத்தைக் கடந்து முடித்துள்ளார்கள்.

பேர்லின் நகரை நோக்கிச் செல்லும் வழியில்,  தாம் கடந்து செல்கின்ற  நகரங்களிளெல்லாம் துண்டுப்பிரசுரங்களை வழங்கியும், முதன்மைப் பிரதிநிதிகளைச் சந்தித்த வண்ணமுமே தமது பயணத்தைத் தொடர்கின்றனர்.  பேர்லின் நகரில் 22.10.2010 அன்று நடைபெறவுள்ள கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நிகழ்வில் பெரும் திரளாக மக்கள் அணிதிரண்டு தாயக உறவுகளுக்காக குரல் கொடுப்பதோடு, எம் உரிமைக்காகவும் குரல்கொடுக்கும் வரலாற்றுத் தொண்டைச் செய்வதற்குப் புறப்பட்டு வருமாறு அன்புடன் அழைக்கிறார்கள் பயணக்குழுவினர்.

கண்ணை மூடி உறங்கும் உலக நாடுகளின் மனக்கதவுகளை திறப்பதற்காக பேர்லீன் நோக்கி தமது மிதிவண்டிப்பயணத்தை மேற்கொண்டுள்ள இளைஞர்களுடன் நீங்கள் உரையாடுவதற்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கும் 0049 – 1786178500 எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்.

நன்றி: ஈழதேசம்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.