குளிரான காலநிலையிலும் மனிதநேய நடைப்பயணம் டென்மார்க்கில் 4வது நாளாக தொடர்கின்றது

நேற்று சனிக்கிழமை Fyn தீவை நோக்கி தொடர்ந்த மனிதநேய நடைப்பயணம் மாலையில் Nørre Aaby நகரத்தை சென்றடைந்தது. நேற்று மனிதநேய நடைப்பயணத்தில் ஈடுபட்டுவரும் மனோ, தீபன் மற்றும் மகேசுடன் சேர்ந்து பயணத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. குறிப்பாக சிறுவர்கள் பலர் தமிழீழ தேசியக்கொடியையும் தாங்கி நடைப்பயணத்தில் கலந்து கொண்டனர்.

Fyn தீவின் முதல் நகரமான Middelfart ஐ நடைப்பயணம் சென்றடைந்ததும் அங்கே வாழும் மக்கள் டென்மார்க் அரசிடம் நீதி கேட்டு நடைபெறும் இந்த மனிதநேய நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ள மகேஸ், மனோ மற்றும் தீபன் அவர்களை தீவின் உள்ளுர் தொலைக்காட்சி நிலையத்திற்க்கு அழைத்துச்சென்றனர்.
தமிழீழ மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலை, தமிழீழத்தில் நடைபெறும் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் மற்றும் வதைமுகாங்களிலும் சித்தரவதைக்கூடங்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள எமது உறவுகளின் நிலமைகள் போன்ற பலவிடையங்களை நடைபயணத்தில் ஈடுபட்ட மூவரும் தெளிவாக தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் எடுத்துரைத்தனர். மற்றைய நாடுகளில் எமது உறவுகள் மேற்கொள்ளும் மனித நேயபயணங்கள் பற்றியும் எடுத்துக்கூறினர்.

நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கால்கள் மிகவும் வீங்கிய நிலையிலும் கடும் குளிரிலும் நேற்று நடைப்பயணம் நகர்ந்தது. நடைப்பணயத்தை நேற்று மாலை நிறைவு செய்யும் பொழுது குளிர் பூச்சியம் பாகைக் குறைவாக இருந்தது.

வீங்கியுள்ளதால் கால்கள் பல முப பாராமாக தான் உணர்வதாக நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் நேற்று மாலை தெரிவித்தார். ஆனால் முவரும் ஒரேகுரலில் “எமது இனத்திற்கு நீதி வேண்டும் சிங்கள அரசை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் அதர்காக நாம் இந்த பணயத்தை தொடர்ந்து மேற்கொண்டு டென்மார்க் அரசிடமும் அனைத்துலகத்திடமும் நீதி கேட்பதுடன் டெனிஸ் மக்களுக்கு எமது எமது இனத்தின் அவலநிலமையை எடுத்துரைப்போம்” எனக்கூறினர்.

இன்றும் காலநிலை குளிராக இருக்கின்றபோதும் மனித நேய நடைப்பயணம் தீவின் மத்தியில் உள்ள டென்மார்க்கின் பெரிய நகரங்களில் ஒன்றாகிய Odense நோக்கி செல்கின்றது.

வரும் சனிக்கிழமை (23.10.2010) டென்மார்க்கின் தலைநகரை சென்றடையும் மகேஸவரன், பார்த்தீபன் மற்றும் மனோகரனை வரவேற்று அங்கே நடைபெற இருக்கும் எழுச்சி ஒன்றுகூடலில் அதிகப்படியான டென்மார்க் வாழ் தமிழீழ மக்களை கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அனைத்து நகரங்களிலும் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்படுவதாகவும் உங்கள் நகரங்களில் உள்ள தமிழ் அமைப்புகளை அல்லது டென்மார்க் தமிழர் பேரவையின் உங்க நகர தொடர்பாளரை தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்கின்றோம்..

நடைப்பயணத்தில் ஈடுபடுவோருடன் தொடர்புகொள்ள தொலைபேசி: (0045)52173671 அல்லது Skype: dtfdenmark

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.