காவலன் வெளிநாட்டு உரிமை ரூ 6 கோடிக்கு விற்பனை!

அசின் நடித்துள்ள விஜய் படத்தைப் புறக்கணிப்போம் என்று தமிழ்  உணர்வாளர்கள் ஒரு பக்கமும், சுறா நஷ்டத்தை ஈடு செய்யாத விஜய்க்கு காவலன் படத்தில் ஒத்துழைப்பு தரமாட்டோம் என திரையரங்க உரிமையாளர்களும் கொடிபிடித்துக் கொண்டிருக்க, காவலன் படத்தின் வெளிநாட்டு உரிமை மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

தந்த்ரா பிக்சர்ஸ் இந்தப் படத்தை ரூ 6 கோடிக்கு வாங்கியுள்ளது. விஜய் படங்களிலேயே அதிக விலைக்கு ஓவர்ஸீஸ் ரைட்ஸ் விற்கப்பட்டிருப்பது காவலனுக்குத்தான் என்கிறார்கள்.

மலையாளப் படமான பாடிகார்டின் ரீமேக்தான் இந்த காவலன். இந்தப்படத்தின் கேரள உரிமை ரூ 1.25 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. தமீன்ஸ் பிலிம்ஸ் வாங்கியுள்ளது.

தமிழகத்தில் இந்தப் படத்தை ரெட்ஜெயன்ட் வெளியிடும் என்று கூறப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.