இலங்கை புகலிடக் குடியேற்றக்காரர்களை ஏற்றிய கப்பல் ஒன்று தொடர்பில் கனடா தீவிர கண்காணிப்பு

இலங்கை புகலிடக் குடியேற்றக்காரர்களை ஏற்றிய கப்பல் ஒன்று தொடர்பில் கனடா தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

கனடாவில் புகலிடம் கோரும் நோக்கில் இலங்கையர்களை எற்றிய இரண்டாவது கப்பலொன்று பயணிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், வேறும் நாடுகளின் உதவிடன் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலிய புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
மற்றுமொரு கப்பலில் இலங்கையர்கள் கனடா நோக்கி நகர்வதாக நம்பகத் தகுந்த புலனாய்வு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.