யாழ். வைத்தியசாலையில் பகற் கொள்ளை!

யாழ். போதனா வைத்தியசாலைக்கு எக்ஸ்ரே எடுப்பதற்காகச் சென்ற வயோதிப மாதுவின் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கரவெட்டி மத்தியைச் சேர்ந்த திருமதி ஈஸ்வரபாதம் பரமேஸ்வரி (வயது 65) என்பவரது தங்க நகைகளே அபகரிக்கப்பட்டள்ளன.

குறித்த பெண் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எக்ஸ்ரே எடுக்கச் சென்றுள்ளார்.

தனது மகனுடன் சென்ற இவரை மகன் வைத்தியசாலையில் விட்டுவிட்டுச் சென்ற வேளை அவ்விடத்திற்கு வந்த நபர் ஒருவர் உங்களது மகனை எனக்கு நன்றாகத் தெரியும். என்று கதைத்துவிட்டு எக்ஸ்ரே எடுப்பதற்கு தான் அழைத்துச் செல்வதாகக் கூறி கூட்டிச் சென்றுள்ளார்.

பின்பு ஓர் அறையினுள் சென்றுவந்த நபர் எக்ஸ்ரே எடுப்பதற்கு தங்கம் அணியக்கூடாது அவற்றைக் கழற்றித் தருமாறு கேட்ட நபர் நகையினை பெற்றுக் கொண்டு மாயமாகியுள்ளார்.

குறித்த வயோதிபப் பெண்ணின் மருத்துவக் குறிப்புப் புத்தகத்தினையும் அவர் அபகரித்துச் சென்றுள்ளமையால் நோயாளியான அவர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.