நாசாவின் அடுத்தகட்ட விண்வெளித் திட்டத்திற்கு வெள்ளைமாளிகை ஒப்புதல்

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் அடுத்த கட்ட விண்வெளி ஆய்வுப்பணிகளுக்கு அமெரிக்க அரசு அங்கீபாரம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விண்வெளியில் செயற்பட்டுவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை வரும் 2020 ஆம் ஆண்டுவரை தெடர்ந்து இயக்குவதற்கும் அடுத்தவருடம் மேலதிகமாக ஒரு விண்வெளிப் பயணத்தை மேற்பொள்வதற்கும் நாசா நிறுவனம் வெள்ளை மாளிகையிடம் அனுமதி கோரியிருந்தது. கடந்தவாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்தக் கோரிக்கையில் அமெரிக்க அதியர் பராக் ஒபாக கையொப்பமிட்டு, நாசாவின் கோரிக்கைளை செயற்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த ஒப்புதலுக்கமைவாக, நாசா நிறுவனம் விண்வெளியில் மேலும் பல ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளவல்ல சக்திமிக்க உந்துகணையினைத் தயாரிக்கும் பணியினைத் தொடங்கவுள்ளது.

மேலும் இந்த ஒப்புதல், விண்வெளிக்கு உல்லாசப்பயணிகளை கொண்டு செல்வதற்கான அனுமதியையும் நாசாவுக்கு வழங்கியுள்ளது. இதற்கமைவாக அடுத்த மூன்று வருடங்களுக்குள் உல்லாசப் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச்செல்லும் தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்காக நாசா 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.

அத்துடன் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் புஸ் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட, மனிதர்களை மீண்டும் சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை நிறைவு செய்வதற்கும் ஒபாமா நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.