தமது பணியாளர்களின் சுதந்திர நடமாட்டத்தை உறுதிசெய்யுமாறு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கோருகிறது

e0ae9ae0af86e0ae9ee0af8de0ae9ae0aebfe0aeb2e0af81e0aeb5e0af88-e0ae9ae0ae99e0af8de0ae95e0aeaee0af8dசர்வதேச செஞ்சிலுவை சங்கமும் அதன் இலங்கை கிளையும் அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்றத் துறை அமைச்சரை சந்தித்து வன்னியில் இடம்பெயர்ந்த நிலையில் உள்ள மக்களுக்கான அத்தியாவசிய மனிதாபிமான உதவி வழங்கல் குறித்து ஆராய்ந்துள்ளன.  இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்க பணியாளர்களின் நடமாட்டச் சுதந்திரத்தினை அந்த பிரதேசங்களில் உறுதிசெய்யுமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல் பாதுகாப்பு பிரதேசங்களுக்கு வருகை தந்துள்ள சுமார் 36 ஆயிரம் பொது மக்கள் தாம் தற்காலிக முகாம்களில் நிம்மதியாக வாழக்கூடிய வகையிலான பாதுகாப்பினை உறுதி செய்வதுடன் அவர்களுக்கான கூடாரம், உணவு, மருந்து மற்றும் உடை உள்ளிட்ட முக்கிய தேவைகளையும் விநியோகிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

அத்துடன் அவ்வாறு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் தற்போதைய நிலவரம் சுமுக நிலைக்கு வந்ததும் அவர்களின் சொந்த இருப்பிடங்களுக்கு செல்ல அனுமதியளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சருடனான இந்தச் சந்திப்பின் போது பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான சுத்தமான நீர்வழங்கல் சுகாதார வசதியளிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறும் கோரப்பட்டதாக சர்வசேதச செஞ்சிலுவை சங்க அறிக்கை தெரிவிக்கிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.