மாத்தறை மாவட்டத்தில் திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் 99 தமிழர்கள் சந்தேகத்தில் கைது

e0ae95e0af88e0aea4e0af81மாத்தறை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலில் 99 தமிழர்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இன்று அதிகாலை வரை அக்குரஸ்ஸ மொரவக்க பிட்டபெத்தர மற்றும் தெனியாய போன்ற பகுதிகளிலுள்ள தோட்டப்புரங்களில்  நடத்தப்பட்ட  சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 2,399 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர், 759 வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் இவர்களில் தமது பதிவை உறுதிப்படுத்தத் தவறிய 99 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

கைதான அனைவரும் அந்தந்த பகுதிகளிலுள்ள காவல்நிலையங்களில் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

உரிய விசாரணைகளை அடுத்து அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை நடத்திய குண்டுதாரி அடிக்கடி நடமாடியதாகவும் அப்பகுதியிலேயே நீண்ட நாட்களாக தங்கியிருந்துள்ளார் என்றும் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இந்த சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது என்று ஊடக பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.