அம்பாறையில் புலிகளின் தாக்குதலில் ஒரு காவல்துறை உட்பட 3 சிப்பாய்கள் பலி! மேலும் 2 பேர் காயம்

109a758bf9f5aedஅம்பாறை மாவட்டத்தில் சாஹாமம், மற்றும் பனங்காடு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட படையினரை இலக்கு வைத்து புலிகள் நடாதிய தாக்குதலில் ஒரு காவல்துறை உட்பட 3 படைச் சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதுடன் 2 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று புதன்கிழமை காலை 10.00 மணியளவில் அக்கரைப்பற்று சாஹாமம் பகுதியில் வீதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாதுகாப்பு தரப்பினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காவல்துறையினர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 பனங்காடு பகுதியில் நண்பல் 12.00 மணியளவில் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் மீது விடுதலை புலிகள் நடாத்திய தாக்குதலில் இரு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக அம்பாறை விடுதலை புலிகள் தெரிவிக்கின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.