வன்னியில் எறிகணை மற்றும் வான் தாக்குதலில் 67 தமிழர்கள் படுகொலை

nerudal-tamil31வன்னிப்பெரு நிலப்பரப்பில் ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளில் சிறிலங்கா படையினரின் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் நேற்றும் 67 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 97 பேர் காயமடைந்துள்ளனர்.

‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம், இடைக்காடு, அம்பலவன்பொக்கணை மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி நேற்று புதன்கிழமை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 30 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 45 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி நேற்று காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அதேவேளையில் ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, இடைக்காடு, வலைஞர்மடம் ஆகிய பகுதிகளின் மீது நேற்று சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.

இதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 52 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

த.சத்தியரூபி ((வயது 36)

ந.ராசம்மா (வயது 70)

செ.டானியன் (வயது 62)

க.சிவக்கொழுந்து (வயது 60)

அ.சுரேந்தினி (வயது 28)

அ.சுஜாதா (வயது 03)

ச.தங்கராசா (வயது 45)

சி.நிரோசா (வயது 10)

செ.நிரோஜன் (வயது 09)

ச.சத்தியரூபி (வயது 26)

இ.சபேசன் (வயது 24)

த.தியாகராசா (வயது 65)

யோ.ரெதீபன் (வயது 09)

யோ.அந்தோனிப்பிள்ளை (வயது 59)

க.கலைவாணன் (மாதம் 08)

ரூ.சர்மிலா (வயது 30)

ஜெ.சசிகலா (வயது 32)

ந.திருபாலசிங்கம் (வயது 55)

ந.ராசமணி (வயது 70)

சி.நிரேயினி (வயது 10)

ச.தர்சினி (வயது 26)

த.தியாகராசா (வயது 60)

து.துவாரகா (வயது 03)

த.தர்மிகா (வயது 05)

வே.சர்மியா (வயது 10)

ச.கண்மணி (வயது 48)

க.பத்மசீலா (வயது 58)

நீ.வேணி (வயது 44)

சி.கோபிகன் (வயது 16)

சி.கலாதேவி (வயது 39)

ச.ஜெனோபா (வயது 30)

ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனையோரின் பெயர் விபரம் கிடைக்கப்பெறவில்லை.

இதேவேளையில் சிறிலங்கா படையினரின் துப்பாக்கிச் சூட்டில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மேலும் ஒரு பணியாளர் படுகாயமடைந்துள்ளார்.

பணியில் இருந்த போது சிறிலங்கா படையினரின் துப்பாக்கிச் சூடு இவர் மீது பாய்ந்ததாக வன்னியில் இருந்து செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மகேந்திரராசா ராம்குமார் (வயது 27) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

அண்மைக்காலமாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்கள் மீதான சிறிலங்கா படையினரின் தாக்குதல்கள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.