இலங்கை செய்திகள் சர்வதேச தொண்டு நிறுவனமான “கெயார்” அமைப்பின் பணியாளர் செல் வீச்சில் இறந்துள்ளார்

care_logo_inமனிதாபிமான உதவிகளை செய்துவரும் சர்வதேச தொண்டு நிறுசனமான கெயார் அமைப்பின் பணியாளர் ஒருவர் சிறிலங்கா இராணுவத்தின் செல்வீச்சினால் படுகாயமடைந்து போதிய மருந்துப் பொருட்கள் இல்லாமையினால் உயிரிழந்துள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியை நோக்கி சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சினால் படுகாயமடைந்த 24 அகவையுடைய ஆர். சபேசன் போதியளவு மருந்துப் பொருட்கள் இல்லைமையினால் சிகிச்சையின்றி உயிரிழந்துள்ளதாக அந்த நிறுனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பாதுகாப்பு வலயத்தில் இந்த ஆண்டில் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு, மருந்துப் பொருட்களுக்கு பாரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு அவசரமாக மருந்துப் பொருட்கள், மற்றும் உணவு தேவைப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.