இலங்கை நிலைமை பெரும் வேதனையளிக்கின்றது

இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்தம் பெரும் வேதனையளிப்பதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து அமெரிக்கா பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் விரைவில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தக் கூடிய ஓர் சூழ்நிலை வெகுவிரைவில் உருவாகும் எனத் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பதில் ஊடகப் பேச்சாளர் ரொபர்ட் வூட் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மீதும், ங்ஹ்J மக்கள் மீதும் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் பெரும் கவலையளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.