புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தை நோக்கி 3 படையணிகள் முன்னகர்வு: படைத்தரப்பு தெரிவிப்பு

11lanka600முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தில் தங்கியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக புதுமாத்தளன் பகுதியை நோக்கி இராணுவத்தின் மூன்று படையணிகள் தீவிர முன்னகர்வு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்தது.

55, 58 மற்றும் 8ஆவது விஷேட படையணியினரே இந்த தீவிர முன்னகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்துளள்ளனர்

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின், புதுக்குடியிருப்பு மற்றும் சாலை தெற்குப் பகுதிகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கடும் மோதலில் இருதரப்புக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு மேலும் தெரிவிக்கினறது.

எனினும் இம்மோதல் தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து எதுவித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.