திருமலை சிறுமி கொலை சு10த்திரதாரி சயனைட் அருந்தி மரணமாம் – சயனைட் இவர்களுக்கு ஒரு கேடு -சுத்திரதாரியின் மரணதொடர்பில்மர்மம்…அரசு மூடிமறைப்பதாக ஜேவிபி குற்றச்சாட்டு

2trinco20child20tmvpதிருகோணமலையில் ஜூட் ரெஜி வர்ஷா (வயது 6 ) என்ற சிறுமியை கடத்தி ,கப்பம் கோரி பின்னர் படுகொலை செய்த சம்பவம் தொடர்புடைய சந்தேக நபரொருவர்  சயனைட் அருந்தி தற்கொலை செய்துள்ளார்.

ஜனா எனப்படும் வரதராஜா ஜனார்த்தனன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் என பொலிஸ் தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.

உப்புவெளி பகுதியில் தங்களது ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை அடையாளம் காட்டுவதாகக் கூறியதையடுத்து பொலிஸார் இவரை அங்கு அழைத்துச் சென்ற போது அங்கு இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கபப்ட்டதாகவும், அந்த சமயம் இவர் சயனைட் உட்கொண்டதாகவும் பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

திருக்கோணமலையில் நடைபெற்றுள்ள 30 க்கும் மேற்பட்ட சம்பவங்களுடன் வர்சாவின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் ஈடுபட்டிருந்தமை விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

சயனைட் உட்கொண்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்ட போதிலும் பின்னர் இவர் உயிரிழந்ததாக தெரிவிக்கபப்டுகின்றது.இச்சிறுமியின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைதான போதிலும் பிரதான சந்தேக நபர் ஏற்கனவே பொலிஸாரின் துப்பாக்கிச் சு10ட்டில் கொல்லப்பட்டிருந்தார்.

சயனைட் உட்கொண்ட நபர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்று விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் இந் நபருக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று அக்கட்சி அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
திருகோண மலையில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் கொலையுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு உள்ள தொடர்பை மூடி மறைக்க பல வழிகளாலும் முயற்சிகள் இடம் பெறுவதாக ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதை தெரிவித்த அவர் அம்முயற்சியின் ஒரு பகுதியாக திருமலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியஸ்டரை இடமாற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.