ஐ.நா. கொழும்புக் கிளை போலித் தகவல்களை வெளியிட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டு

hd_wreathஐக்கிய நாடுகள் அமைப்பின் கொழும்புக் கிளை பொதுமக்கள் உயிரிழப்பு குறித்து போலியான தகவல்களை வெளியிட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் இடையிலான மோதல்களின் போது 2,863 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கொழும்புக் கிளை ஜெனீவாவில் உள்ள
தலைமையகத்திற்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்தப் புள்ளி விபரங்கள் உண்மைக்குப் புறம்பானவை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த பொய்யான அறிக்கையின் பிரதியொன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை இலங்கைக் கிளையில் தயாரிக்கப்பட்டதென ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த செய்தியல் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.