திருமாவளவன் திமுக அணியில் ராமதாஸ் அதிமுக அணியில் !

thiru-ramதேர்தலில் ஈழத்தமிழர் விவகாரம் வலுக்குன்றுமா என்ற கேள்வியை திருமா – ராமதாஸ் இருவருடைய செயல்களும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழீழ மக்களுக்காக குரல் கொடுத்த அணிகள் வடக்கும், தெற்குமாக இரு துருவங்களாக நின்றால் தேர்தலில் ஈழப் பிரச்சனை வலுவிழக்கும் நிலை வரும். வரும் தேர்தலில் ஈழத் தமிழர் விவகாரம் வெற்றியை தீர்மானிக்கும் துருப்புச் சீட்டாக இருக்கும் என்று பழ. நெடுமாறன் கூறியிருக்கும் வேளையில் இவர்கள் இருவரும் எதிரும் புதிருமாக நின்று ஈழப்பிரச்சனையை மூழ்கடிப்பார்களா என்ற அச்சம் நிலவுகிறது. 

என்னோடு அ.தி.மு.க. கூட்டணிக்கு வாருங்கள்  என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்த அழைப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஏற்க மறுத்துவிட்டார்.
தி.மு.க, அ.தி.மு.க இரண்டில் யாருடன் கூட்டணி சேருவது என்பதில் இதுவரை முடிவை அறிவிக்காத பாட்டாளி மக்கள் கட்சி, ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளுடனும் பேச்சு நடத்தி வந்தது. அ.தி.மு.க.வுடன் பேசும்போது, ‘எங்களுடன் விடுதலை சிறுத்தைகளும் வருவார்கள்’ என்று உறுதி அளித்ததாக தெரிகிறது.

ஆனால், தி.மு.க கூட்டணியில்தான் விடுதலை சிறுத்தைகள் இருக்கிறார்கள் என்று கருணாநிதி அறிவித்து விட்டார். திருமாவளவனும் முதலமை‌ச்சரை சந்தித்து பேசியபின் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் நேற்று சென்னை தியாகராயநகரில் உள்ள பொங்கு தமிழ் அறக்கட்டளை அலுவலகம் வந்து தன்னை சந்திக்குமாறு திருமாவளவனுக்கு ராமதாஸ் அழைப்பு விடுத்தாராம். இதை தொடர்ந்து திருமாவளவன் அங்கு சென்றிருக்கிறார். அப்போது, ”நாங்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு செல்கிறோம். நீங்களும் எங்களோடு வாருங்கள். நாம் இருவரும் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து விடுவோம்” என்று ராமதாஸ், திருமாவளவனை அழைத்ததாக தெரிகிறது.
 
ஆனால் திருமாவளவனோ, இந்த அழைப்பை முழுமையாக மறுத்துவிட்டார். ”நான் அ.தி.மு.க. கூட்டணிக்கு வர முடியாது. உறுதியாக தி.மு.க. கூட்டணியில்தான் இருப்பேன். முதலமைச்சர் கருணாநிதியுடன்தான் இருப்பேன்” என்று கூறி மறுத்துவிட்டாரா‌ம்.

”இலங்கை‌த் தமிழர்கள் பிரச்சனையில் நாம் இருவரும் எப்படி ஒன்றாக இருக்கிறோமோ, அதேபோல அ.தி.மு.க. கூட்டணியிலும் நாம் ஒன்று சேர்ந்துவிட்டால் நன்றாக இருக்குமே” என்று ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

மேலு‌ம் ‘‌நீ‌ங்க‌ள் எ‌ங்களுட‌ன் வர‌வி‌ல்லை எ‌ன்றா‌ல் சிதம்பரம் தொகுதியில் உங்களை எதிர்த்து பா.ம.க வேட்பாளரை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும்’ என்று ராமதாஸ் எச்சரித்தாராம். அதற்கு ‘அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தி.மு.க கூட்டணியும் அதற்கு தயாராகவே இருக்கிறோ‌ம் என்று திருமாவளவன் கூறினாராம்.

பின்பு ராமதாஸ், நாங்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர முடிவு செய்துவிட்டோம் என்று கூறி மீண்டும் மீண்டும் அழைத்தபோதிலும், திருமாவளவன் நான் தி.மு.க. கூட்டணியில் தான் இருப்பேன், முதலமைச்சர் கருணாநிதியுடன் தான் இருப்பேன் என்று உறுதியாக கூறினாரா‌ம். அ.‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌க்கு வருமாறு ராமதாஸ் அழைப்பை திருமாவளவன் ஏற்க மறுத்தது அரசியல் வட்டாரத்தில் பெரு‌ம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

—————————————————————————————————————-

பிந்திய செய்தி !

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம்,  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிமுக கூட்டணியில் சேர உங்களுடன் தொலைபேசியில் பேசியதாகவும், அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளதே?  என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,  ’டாக்டர் ராமதாஸ் தொலைபேசியில் என்னை தொடர்பு கொள்ளவில்லை. 19-ந் தேதி மாலை 6 மணிக்கு தியாகராயநகரில் உள்ள பொங்குதமிழ் அறக்கட்டளைக்கு சென்று நான் அவரை சந்தித்து பேசியது உண்மைதான்.
இன்றைய தமிழக அரசியல் நிலை, எதிர்காலத்தில் இருகட்சிகளின் ஒற்றுமை ஆகியவை குறித்து வெகு நேரம் பேசினோம்’’ என்ற அவரிடம்,   கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க.வில் இருந்து அழைப்பு வந்ததா? என்று கேட்தற்கு, ’அப்படி அழைப்பு எதுவும் இதுவரை வரவில்லை’ என்றார்.
 

 ஒருவேளை, பாமக அ.தி.மு.க. கூட்டணிக்கு சென்றால், நீங்கள் தி.மு.க. கூட்டணியில் நீடிப்பீர்களா? என்று கேட்டதற்கு, யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. 22-ந் தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டி கூட்டணி பற்றிய முடிவை டாக்டர் ராமதாஸ் அறிவிக்கிறார். அதன் பிறகுதான் நாங்கள் முடிவு செய்வோம்’’ என்று தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.