விடுதலைப் புலிகள் மேலுமொரு வான் தாக்குதலை நடத்தக் கூடும்

28_04_07_taf_01_01_61022_435தமிழீழ விடுதலைப் புலிகள், பகல் வேளையில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அல்லது வர்த்தக மத்திய நிலையமொன்றை இலக்கு வைத்து மேலுமொரு வான் தாக்குதலை மேற்கொள்ளக் கூடுமென காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திடீர் தாக்குதலொன்றை நடத்த புலிகள் திட்டமிட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 20ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களின் போது தேசிய இறைவரித் திணைக்களம் சேதத்திற்கு உள்ளானது.

குறித்த தாக்குதல் சம்பவத்தின் போது புலிகளின் இரண்டு தற்கொலை விமானங்களில் ஒன்று  சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் பலம் முற்றாக அழித்தொழிக்கப்பட்டதாகவும், அரசாங்கப் பாதுகாப்புப் பிரிவின் பல தரப்பினரும் அறிக்கைகளை வெளியிட்டிருந்த போதிலும் காவல்துறையினர் எச்சரிக்கை விட்டிருப்பது  சுட்டிக்காட்டப்படத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.