வணங்காமண் உணவு கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்தால் அழிக்கும் உரிமை எமக்குள்ளது – கடற்படை

primary-mediumவன்னியில் இராணுவத்தின் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பாத நிலையில் புலம்பெயர் மக்களினால் சேகரிக்கப்பட்ட பொருட்களை கொண்டுவரும் “வணங்காமண்” உணவு கப்பல் மீது தாக்குதல் நடாத்தப்படும் என இலங்கை கடற்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரித்தானிய தமிழ் அமைப்பு ஒன்றினால் 2,000 மெற்றித் தொன் உணவுப் பொருட்கள் விடுதலைப்புலிகளின் வணங்காமண் என்ற கப்பலில் கொண்டு வரப்பட உள்ளதாகவும் இந்த தமிழ் அமைப்பு விடுதலைப்புலிகளின் வலையமைப்புடன் சம்பந்தப்பட்டது எனவும் இது குறித்த தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய முற்பட்டால் தாக்குதல் நடத்தப்படும் எனவும் பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

ஒபரேஷன் வணங்கா மண் என்ற இந்த கப்பல் பிரித்தானியாவில் இருந்து புறப்பட்டு இலங்கையின் எதிர்ப்பையும் மீறி முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் நுழையும் என பிரித்தானிய தமிழ் அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“வணங்கா மண்” கப்பலின் உரிமையாளர்கள் யார் என்பது குறித்து கடற்படையினர் லண்டனில் உள்ள சர்வதேச லொயிட் நிறுவனத்திடம் விசாரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும் இந்த கப்பல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொடியை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது எனவும் பாதுகாப்பு தரப்பு கூறியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.