இலங்கையால் ஒடுக்க முடியாத விடுதலைப்புலிகளை அமெரிக்க இராணுவத்தால் ஒடுக்க முயற்சிக்கின்றது

vickramabahu11jpgஇலங்கை படையினரால் ஒடுக்க முடியாத விடுதலைப்புலிகளை அமெரிக்க இராணுவத்தை கொண்டு ஒடுக்க முயற்சிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.  இலங்கை அரசாங்கம் உள்நாட்டு பிரச்சினையைத் தீரக்காமல், அழிவை ஏற்படுத்தும் யுத்தம் ஒன்றை ஆரம்பித்து, அமெரிக்க இராணுவத்திற்கும் இலங்கைக்குள் பலவந்தமாக பின்னணியை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களை காப்பற்றுவதற்காகவே ஹவாயில் உள்ள அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய இராணுவம் இலங்கைக்கு வர முயற்சிக்கின்றது.

இது ஒரு ஆக்கிரமிப்பாகும். பயங்கரவாதத்தை அழிப்பதாக கூறும் ராஜபக்ஷக்களின் தேசப்பற்று அமெரிக்க இராணுவத்திற்கு இலங்கை ஆக்கிரமிக்க வழி அமைத்துள்ளது. இதற்கு எதிராக கடுமையாக போராட வேண்டியுள்ளது. காரணம் அமெரிக்க படையினரைப் பயன்படுத்தி இலங்கை மக்களை தாக்க இடமளிக்க முடியாது. 
 
இந்தப் போலியான தேசப்பற்று அரசாங்கம் விரும்பியோ விரும்பாமலோ அதுவே நடக்கப் போகிறது. அதேவேளை தமிழ் மக்களை காப்பற்ற தமது கடற்படை வரவுள்ளதாக இந்தியா கூறியுள்ளது. எனினும் புலிகளிடம் தற்போதுள்ளவர்கள் 75 வீதமானவர்கள் புலிகளின் உறுப்பினர்கள் என அரசாங்கம் கூறுகிறது.

அமெரிக்க இராணுவம் பலவந்தமாக இலங்கைக்கு வர முயற்சிப்பதாக தமிழ் நெட் இணையத்தளம் கூட தெரிவித்துள்ளது. தேசப்பற்றுள்ள அமைப்பு, துட்டகைமுனு அமைப்பு. மகாவம்சம், குரக்கன் ரொட்டி, உள்ளிட்ட அனைத்தையும் நைப்பதற்கு அமெரிக்க இராணுவத்திற்கு இடமளிக்கப்படுமா என தாம் அரசாங்கத்தில் உள்ள போலி தேசப்பாற்றாளர்களிடம் தாம் கேள்வி எழுப்புவதாகவும் விக்ரமபாகு குறிப்பிட்டுள்ளார். 
 
இது போன்ற தேசப்பற்றாளர்கள் இந்த நாட்டில் இதற்கு முன்னர் உருவாகி இருக்கவில்லை. இவர்களுக்கு எதிராக மக்கள் உடனடியாக கிளர்ந்தெழுவது அவசியம். சிங்கள தாய்மார்களின் 15 ஆயிரம்  பிள்ளைகள் இந்த யுத்தம் காரணமாக அழிந்து போயுள்ளனர். தற்போது இருக்கும் தேசப்பற்றாளர்கள் இந்த 15 ஆயிரம் பேரும் காணாமல் போனதாக கூறி ஊதியத்தை கூட வழங்காதவர்கள் எனவும் விக்ரமபாகு கூறியுள்ளார்.

அதேவேளை விடுதலைப்புலிகளுடன் தற்போது இருக்கும் மக்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் மக்கள் எனவும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கூறியுள்ளார். ஊடக இதழ் ஒன்றுக்கு அண்மையில் வழங்கிய செவ்வியில் விக்ரமபாகு கருணாரட்ன இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.