வன்னி நிலவரங்களை நேரில் கண்டறிய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு விரைவில் இலங்கைக்கு விஜயம்

e0ae90e0aeb0e0af8be0aeaae0af8de0aeaae0aebfe0aeaf-e0ae92e0aea9e0af8de0aeb1e0aebfe0aeafவன்னிச் சிவிலியன்களது நிலவரங்களை நேரில் கண்டறியும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் குழாமொன்று வெகுவிரைவில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலைமையை பார்வையிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குழுவினரின் விஜயம் குறித்த நிகழ்ச்சி நிரல் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.
 
எவ்வாறெனினும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களோ அல்லது அதன் துணை அமைப்பு உறுப்பினர்களோ யுத்த களத்திற்கு நேரில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் இலங்கை விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் ஆதரவு அமைப்புக்களும் உலக அரங்கில் அரசாங்கத்திற்கு எதிராக வலுவான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
வன்னிச் சிவிலியன்களுக்கு இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் வசதிகளை ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் கண்டறிய சந்தர்ப்பம் வழங்கப்படும் என பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.