பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் வாழ்ந்து வரும் மக்கள் பல்வேறு பிரச்சனைக்கு முகம் கொடுத்து வருகின்றனர்

poonthottam_-idpsவவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் வாழ்ந்து வரும் மக்கள் பல்வேறு பிரச்சனைக்கு முகம் கொடுத்து வருவதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

28.02.09 திகதி அன்று பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தின் முதலாம் யுனிட் பகுதியில் இடம் பெற்ற தீ விபத்து காரணமாக 48 குடும்பங்கள் பாதிப்படைந்து இருந்தார்கள் இந்த பொது மக்கள் தற்போதும் எரிந்த இடத்திலையே தற்காலிக கொட்டகைகளை அமைத்து வாழ்ந்து வருகிறார்கள.

இவர்களுக்கு உரிய உதவிகளை யாரும் செய்து தரவில்லை என்றும் அந்த பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த 48 குடும்பங்களினையும் வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்திற்கு செல்லுமாறு அரச அதிகாரிகள் கேட்ட போது அந்த மக்கள் தொடர்ந்தும் தாங்கள் மீண்டும் நலன்புரி நிலையத்திற்கு செல்ல முடியாது என்றும் தங்களை நிரந்தரமாக குடியமர்துமாறு அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.